×

நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது: அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: மதிகெட்டான் சோலை வனப்பகுதி தேசிய பூங்காவை பாதுகாக்கும் நோக்கத்தில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கக் கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்தை ஏற்று, மத்திய சுற்றுச்சூழல் துறை பூங்காவின் கிழக்கு எல்லையைத் தவிர்த்து 1 கிமீ தொலைவிற்கான மற்ற பகுதிகள் அனைத்தையும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவித்துள்ளது. இது தேனி மாவட்டம், பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்காகப் பெற வேண்டிய அனுமதிகளை எளிதில் பெறுவதற்கான முயற்சியாக அமைந்துள்ளது. இது வன்மையானக் கண்டனத்துக்கு உரியது.


நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்தும்போது கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்படும் சுரங்கம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்களால் நிச்சயமாக மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது.
தனது மாநில கட்டுப்பாட்டில் வரவில்லை என்பதற்காக மதிகெட்டான் சோலைக்கு அருகே உள்ள வனப்பரப்பை சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்க முடியாது என்கிற தமிழக அரசின் வாதமும் தவறானது. மேற்குத் தொடர்ச்சி மலையின் முக்கியத்துவம் கருதியும், தமிழ்நாடு போராடிப் பெற்ற முல்லைப் பெரியாறு அணையின் மீதான உரிமை கருதியும் தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : government ,Waiko , Neutrino project should not be allowed: Vaiko urges government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...