×

அமித் ஷாவை அவமதித்ததாக நகைச்சுவை நடிகர் கைது

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபலமான 56 டுகான் ஓட்டலில் நடந்த ஆங்கில புத்தாண்டு நிகழ்ச்சியின் போது குஜராத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூகி என்பவர் பங்கேற்றார். அப்போது அவர், குறிப்பிட்ட மதத்தின் மத நம்பிக்கைகளையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவமதித்து நடித்து காட்டி பேசியதாக புகார் எழுந்தது. இதன் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது.

இவ்விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ மாலினி கவுரின்  மகன் ஏக்லவ்யா கவுர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்தூர் போலீசார் முனாவர் ஃபாரூகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்கண்ட 5 பேரையும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலுக்கு நீதிமன்றம் அனுப்பியது. அவர்கள் இந்தூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : Comedian ,Amit Shah , Comedian arrested for insulting Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...