×

14ல் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி: சபரிமலையில் குடில் அமைக்க தடை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் குடில் அமைத்து தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் 31ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடக்கிறது. 20ம் தேதி காலை 6 மணிக்கு பந்தள ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்துக்கு பிறகு நடை அடைக்கப்படும். ெகாரோனா அச்சம் காரணமாக சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் நடக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு அளிக்கவும், தீபாராதனை காட்டவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனத்துக்கு பக்தர்கள் குடில் அமைத்து காத்திருக்க அனுமதியில்லை. வழக்கமாக மகரஜோதிக்கு 2, 3 நாட்களுக்கு முன்னதாகவே பக்தர்கள் குடில் அமைத்து தங்குவது வழக்கம். பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்படும் திருவாபரண பெட்டி வரும் 14ம் தேதி மாலை 6.20க்கு சன்னிதானம் வந்தடையும். திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு சார்த்தி தீபாராதனை நடக்கும்போது, மகரஜோதி தெரியும். அப்போது பொன்னம்பல ேமட்டில் கற்பூர ஆராதனையும் நடக்கும்.



Tags : Ponnambala Mattil ,Sabarimala , Ponnambala Mattil, Maharajothi, Sabarimala, hut
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு