×

‘ஆன் கோவிட் டூட்டி’ ஸ்டிக்கர் ஒட்டி கடத்திய 950 கிலோ போதை பொருள் பறிமுதல்

டெல்லி: தலைநகர் டெல்லியின் நாங்லோயில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் சப்ளை நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் டி.சி.பி (குற்றம்) பீஷம் சிங் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, நாங்லோயைச் சேர்ந்த சந்தன் ஷா (30), பீகாரின் பாட்னாவைச் சேர்ந்த கிஷன் தியோ ரே (65) ஆகிய இருவரும் போதை ெபாருள்களை பாக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டிருந்தனர். இருவரையும் சுற்றிவளைத்த போலீசார், சுமார் 950 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து  போலீஸ் டி.சி.பி (குற்றம்) பீஷம் சிங் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட 2 பேரிடம் இருந்து அவர்கள் பயன்படுத்திய வாகனத்துடன் 950 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பறிமுதல்  செய்யப்பட்டது. கடந்த ஒரு  வருடத்தில் டெல்லியில் மிகப்பெரிய அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இது. கொரோனா தடுப்பு தொடர்பான உபகரணங்களை  எடுத்து செல்லும் வகையில், சில பொருட்களை வாங்கி வைத்துள்ளனர். அதனை வெளிமாநிலங்களுக்கு வாகனத்தில் எடுத்து செல்லும் வகையில் கஞ்சாவையும் சேர்த்து கடத்தி வந்துள்ளனர்.

ஒடிசா கும்பலிடம் இருந்து கொள்முதல் செய்து, அங்கிருந்து டெம்போ மற்றும் லாரிகள் வழியாக டெல்லிக்கு கஞ்சாவை கொண்டு வந்து விற்கின்றனர். போதை பொருட்களுடன் மற்ற பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளனர். ஒடிசாவில் உள்ள கஞ்சாமில் என்ற பகுதியை சேர்ந்த முன்னா என்ற நபரிடம் போதை பொருட்களை வாங்கியுள்ளனர். போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தங்களது வாகனத்தில் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி வைத்துள்ளனர். அதில் ‘கோவிட் - 19 அத்தியாவசிய சேவை’ என்றும், ‘ஆன் கோவிட் டூட்டி’ என்றும் எழுதப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : ‘On cow dung, sticker, 950 kg, drug
× RELATED 4 நிதி ஆண்டுகளில் ரூ.1,700 கோடிக்கு...