×

சாத்தான்குளம் பகுதி சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஆவாரம்பூ: சர்க்கரை வியாதியை குணப்படுத்தும்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் பகுதியில் சாலையோரங்களில்  கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் ஆவாரம் பூ காட்சியளிக்கிறது. சாத்தான்குளத்தில் இருந்து இட்டமொழி செல்லும் சாலையோரம் ஆவாரம் பூ செடி நன்றாக வளர்ந்து காணப்படுகிறது.. காட்டு செடியாகவே வளரும் தன்மை கொண்ட  ஆவாரம் பூ கார்த்திகை  மாதம் தொடங்கி தை மாதம் வரை  பருவ காலம் என்பதால் பூத்து அழகாக காட்சி தருகிறது.

அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து ரசிப்பதுடன் பூவை பறித்து செல்கின்றனர். ஆவாரம் செடி மருத்துவ குணம் கொண்டுள்ளதால் தற்போது இந்த பூ அபூர்வமாக தெரிகிறது. சித்த மருத்துவர்களும் இதை பறித்து மருத்துவத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆவாரம் பூ குறித்து சாத்தான்குளம் மூலிகை மருத்துவர் மதுரம் செல்வராஜ் கூறுகையில்,
ஆவாரம் பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்பது  பழமொழி.  

இந்தபூ சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது. விதையானது சித்த மருந்துகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது.  ஆவாரம்பூ சர்க்கரை வியாதியை முழுமையாக குணப்படுத்தக் கூடியது.  ஆவாரம் பூவை பறித்து நன்கு காயவைத்து 10 கிராம் பொடியை வெந்நீர் அல்லது காபியில் கலந்து குடிக்கலாம். இப்படி குடித்து வந்தால் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தலாம். அதுபோன்று சர்க்கரை வியாதியால் ஏற்படும் நம் உடம்பில் ஆறாத புண்கள், அழுகிய நிலையில் இருக்கக்கூடிய புண்கள் இந்தப் புண்களுக்கு ஆவாரம் செடியின் இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து இதனுடன் மஞ்சள் பொடி, ஒரு டீஸ்பூன் வைத்து அரைத்து இந்த புண்கள் மேல் தேய்த்துவந்தால் மூன்று நாட்களில் புண் குணமாகும்.

ஆவாரம் இலை, ஆவாரம் பட்டை, ஆவாரம் பூ, ஆவாரம் காய், ஆவாரம் வேர், இவர்களை ஒன்றாக இடித்து சலித்து அனுதினம் காலை 20 கிராம் இரவு 20 கிராம் உண்டுவந்தால் முழுமையான சர்க்கரை வியாதியை குணப்படுத்த லாம். அதுபோன்று  பயன்படுத்தக்கூடிய ஆவாரம் இலைகளை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும். முடி நன்கு வளரும். உடல் சூட்டை தணிக்க கூடியது. அநேக மருத்துவ குணங்கள் உடையது.
ஆவாரம்பூ.

சாத்தான்குளம் பகுதியில் பல மூலிகை பொருள்கள் காட்சி பொருளாகவே காணப்படுகிறது. முன்னோர்கள் வீடுகளில்  இயற்கை மூலிகை மருந்துகள் அன்றாடம்  பயன்படுத்தி வந்தனர். தற்போது அனைவரும் ஆங்கில மருத்துவத்தையே நம்பி உள்ளது. மக்களும் இதை  உணர்ந்து இயற்கை மருத்துகளை பயன்படுத்திட வேண்டும். அரசு    மூலிகை செடிகள் அதிகம் காணப்படும் பகுதியில் மூலிகை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

Tags : Sathankulam, Blooming, Avarambu
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!