×

ராமேஸ்வரம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் இறந்து கரை ஒதுங்கிய டால்பினை வனத்துறையினர் மீட்டு பரிசோதனை செய்தனர். மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலில் வாழும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் இறந்து கரை ஒதுங்குகிறது. ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியிலும், ராமேஸ்வரம் தீவு கடற்கரையோரங்களிலும் கடல் ஆமை, டால்பின், கடல்பன்றி, கடல்பசு உள்ளிட்டவைகள், திமிங்கலம் உட்பட பெரிய மீன்கள் காயங்களுடன் உயிரிழந்து, மயக்க நிலையில் நீந்திச்செல்ல முடியாமல் அடிக்கடி கரையில் ஒதுங்கிறது.

மீன்பிடி படகுகள், கப்பல்களில் அடிபட்டும், மீனவர்கள் வலையில் சிக்கியும் இந்த உயிரினங்கள் இறப்பது அதிகரித்து வருகிறது. நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கிய நான்கு அடி நீளம், 40 கிலோ எடையும் கொண்ட டால்பின் வாய் மற்றும் வயிற்றின் பகுதியில் ரத்தக்காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கியிருந்தது. டால்பினை மீட்ட வனத்துறையினர் கடற்கரையிலேயே பரிசோதனை செய்து கடற்கரை மணலில் புதைத்தனர்.



Tags : Dolphin ,Rameswaram ,beach , Dolphin stranded at Rameswaram beach
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...