×

கோவை, திருச்சி ஆகிய இடங்களில் குரூப் 1 தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு அறையில் அனுமதிக்க மறுப்பதாக புகார்

கோவை: கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு அறையில் அனுமதிக்க மறுப்பதாக புகார் எழுந்தது. 10 மணிக்கு தேர்வு தொடங்க உள்ளதால் ஒரு மணி நேரத்துக்கு முன்பே தேர்வு மையத்துக்கு வர அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு மேல் வந்தவர்களை தேர்வு அறைக்கு செல்ல அனுமதிக்காததால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காலை 9 மணிக்கு முன்பே தேர்வு அறைக்கு வர வேண்டும் என்பது தங்களுக்கு தெரியவில்லை என கிராமப்புற மாணவர்கள் கூறினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்( டி.என்.பி.எஸ்.சி.)  குரூப்-1 பதவியில்  அடங்கிய 66 காலி  இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 20- ஆம் தேதி வெளியிடப்பட்டது . இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய பிப்ரவரி 19 ஆம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்கள் 128401 பேரும் பெண்கள் 128825 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 11 பேரும் என 257237 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




இந்நிலையில், குரூப்- 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று தொடங்குகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 856 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தேர்வை கண்காணிக்க 856 முதன்மை கண்காணிப்பாளர்கள், 856 சோதனை செய்யும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : examination ,Coimbatore ,Group 1 ,Trichy ,examination room , Coimbatore, Trichy, Group 1 Exam, Attendees, Exam Room
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்