×

பேக்கரியில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு: 5 வாலிபர்கள் கைது

ஆவடி: கேக்  சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.  ஆவடி அடுத்த வீராபுரம், சந்தோஷ்மாதா நகரை சேர்ந்தவர் சக்திவேல்  (23). இவர், அதே பகுதி புதிய கண்ணியம்மன் நகர் பஸ் நிலையத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த 28ந்தேதி பேக்கரி கடைக்கு 5 வாலிபர்கள் வந்தனர். பின்னர்,  அவர்கள் கடையில் கேக் வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் சென்று விட்டனர். இதனை தட்டிக்கேட்ட சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதன்பிறகு, கடந்த 31ம்தேதி இரவு புத்தாண்டை ஒட்டி அவர்கள் அனைவரும் மீண்டும் கடைக்கு வந்தனர்.

பின்னர், அவர்கள் அனைவரும் சக்திவேலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர்,  கடையின் ஷோகேஸ் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து சக்திவேல், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ன போலீசார் வழக்கு பதிவு செய்தனர், விசாரணையில், கடையை கல்லால் அடித்து உடைத்தது அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ் (20), குணா (18), விக்னேஷ் (22), வினோத்குமார் (22), கார்த்திக் (22) ஆகியோர் என தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த 5 வாலிபர்களையும் போலீசார் நேற்று  கைது செய்தனர்.


Tags : teenagers ,bakery , 5 teenagers arrested for eating bakery and not paying
× RELATED திருவொற்றியூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் 2 பேர் சடலமாக மீட்பு