×

மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட் போன்கள் பெற விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட காது கேளாத மற்றும் வாய்பேசாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளது. ஸ்மார்ட் போன்கள் கல்வி பயிபவர்கள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. எனவே, திருவள்ளுர் மாவட்டத்தை சேர்ந்த காது கேளாத மற்றும் வாய்பேசாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையுடன் கூடிய மருத்துவ சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் புகைப்படம், கல்வி பயிலும், பணிபுரியும், சுயதொழில் புரிவதற்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில்  விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Tags : People with disabilities can apply for smart phones
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்