ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு செங்கை மாவட்ட முதல் சங்க பேரவை கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் துவங்கப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் முதல் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் துவங்கப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் முதல் பேரவை கூட்டம் செங்கல்பட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பரணி தலைமை வகித்தார்.  மாவட்ட இணை செயலாளர் ரவி, மாவட்ட தணிக்கையாளர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்தார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் சார்லஸ் சசிகுமார் துவக்க உரையாற்றினார். மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், தமிழக அரசை வலியுறுத்தி, ஊழியர்கள் பயன்பாட்டுக்காக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைமேடை அமைக்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஜல்ஜீவன்மிஷன் திட்ட கட்டமைப்பு செயலாக்கத்துக்கு தனியாக ஊழியர் நியமித்தல், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள 6 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை, பதவி உயர்வின் அடிப்படையில் எந்த முகாந்திரமும் இல்லாமல், உடனடியாக நிரப்ப வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், இளநிலை உதவியாளர் முதல் வட்டார  வளர்ச்சி அலுவலர் வரை பணியிட மாறுதல் உரிய கலந்தாய்வின் மூலம் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களை கால தாமதமின்றி உடனடியாக பதவி உயர்வின் மூலம் நிரப்ப அரசாணையை வெளியிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>