தீவிரவாதிகள் குண்டுவீச்சு 6 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். தெற்கு காஷ்மீரில் டிரால் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு பணியிலிருந்த பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் திடீரென கையெறி குண்டுகளை வீசினர். இந்த குண்டுகள் பாதுகாப்பு படை மீது விழாமல், இலக்கு தவறி அருகில் உள்ள மார்க்கெட்டில் விழுந்து வெடித்தது. இதில், பொதுமக்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தால் டிரால் பேருந்து நிலையம் முழுவதும் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. கையெறி குண்டுகளை வீசிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

Related Stories:

>