×

மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு: குறைந்த கட்டணத்தில் வாகனம் ஓட்ட பயிற்சி

சென்னை: குறைந்த கட்டணத்தில் கனரக, இலகுரக வாகனங்களை ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்படுவதால், அதை விருப்பம்கொண்டவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழகம் வௌியிட்டுள்ள செய்தில், ‘சென்னை, குரோம்பேட்டையில் மாநகர் போக்குவரத்துக்கழக ஓட்டுநர் பயிற்சி பள்ளி அமைந்துள்ளது. இங்கு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி ஆகியவை வழங்கப்படுகிறது. சிறப்பம்சங்களாக ஓட்டுனர் மைதானப் பயிற்சி, சிமுலேட்டர் பயிற்சி, சரிவுகளில் ஏறும், இறங்கும் பயிற்சி, பின் செலுத்துதல் பயிற்சி, அனைத்து விதமான வளைவுகளிலும் பயிற்சி, இரவில் வாகனம் ஓட்டுநர் பயிற்சி, வகுப்பறை பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி, அதிக தூரம் ஓட்டுதல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு பெண்களாலேயே பயிற்சி அளிக்கப்படும். எனவே விரும்பம் கொண்டவர்கள் 044-2953 5177, 94450 30597 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Tags : Bailiff Transportation Announcement: Low cost driving training
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...