×

வன்முறை ஆயுதத்தை எடுக்கும் அதிமுக முடிவு ஆபத்தை ஏற்படுத்தும்: முத்தரசன் கண்டனம்

சென்னை: வன்முறை ஆயுதத்தை எடுக்கும் ஆளுங்கட்சியின் முடிவு ஆபத்தான விளைைவை ஏற்படுத்தும் என்று முத்தரசன் எச்சரித்துள்ளார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம். தொண்டாமுத்தூர் பகுதியில்  தேவராயபுரம் ஊராட்சியில் நடந்த கிராம மக்கள் சபை கூட்டத்தில் அதிமுவினர் திட்டமிட்டு நுழைந்து கலகம் செய்துள்ளனர். வன்முறை மூலம் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் ஈனச் செயலில் ஈடுபட்டவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வன்முறை ஆயுதத்தை எடுப்பது என்ற அதிமுகவின் முடிவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறோம். எதிர்கட்சித் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் காவல்துறை போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல், குற்றச் சம்பவங்கள் நிகழும் போது வெட்கமின்றி மவுனசாட்சியாக நிற்பது சட்டப்படியான கடமைப் பொறுப்புகளை மீறுவதாகும். அரசின் செயல்பாடுகள் மீது  கருத்துக்களை வெளியிடுவது, ஆளும் கட்சியின் தவறுகளையும், அதிகாரிகளின் சட்ட அத்துமீறல்களையும் விமர்சிப்பது, மக்கள் ஆதரவைத் திரட்டிப் போராடுவது போன்ற அரசியல் சட்டம் உறுதி செய்துள்ள ஜனநாயக உரிமைகளை மறுப்பது அதிகார ஆணவத்தின் உச்சமாகும்.


Tags : AIADMK ,Mutharasan , AIADMK decides to take up arms of violence: Mutharasan condemns
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...