4 பிரதமர்களிடம் பணியாற்றியவர் காங். மூத்த தலைவர் பூட்டா சிங் மரணம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டா சிங் உயிரிழந்தார்.  காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் பூட்டா சிங் (87). முன்னாள் மத்திய அமைச்சர். இவர் நான்கு பிரதமர்களின் கீழ் பணியாற்றியவர். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்த இவர், 8 முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர். முதன் முறையாக ராஜஸ்தானின் ஜலோர் தொகுதியில் இருந்து கடந்த 1962ம் ஆண்டு மக்களவைக்கு தேர்வானார். சிரோமணி அகாலி தளத்தில் இருந்த இவர், 1960ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் இவர் பாதிக்கப்பட்டார். இதனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சுயநினைவை இழந்த நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில், நேற்று காலை அவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  காங் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>