×

லடாக் எல்லையில் அத்துமீறல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீனாவுக்கு எதிராக தீர்மானம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடென் வெற்றி பெற்றார். அவர் வரும் 20ம் தேதி புதிய அதிபராக பதவிேயற்கிறார். தற்போதைய அதிபர் டிரம்ப், அதுவரையில் மட்டுமே இப்பதவியில் இருப்பார். இதனால், பல்வேறு அதிரடி முடிவுகளை அவர் எடுத்து வருகிறது. சமீபத்தில், கொரோனா நிவாரண நிதி மசோதாவில் அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிதி குறைவாக இருப்பதாக கூறி, அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார். பின்னர், அவருடைய அதிகாரத்தையும் மீறி அது நிறைவேற்றப்பட்டது. அதேபோல், அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.54.76 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் ராணுவ நிதி மசோதா 2021-ஐ நிறைவேற்ற விடாமலும் அவர் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார். இது, நாடாளுமன்றத்தில் கடந்த 15ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய எல்லையில் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமும் இடம் பெற்றிருந்தது. ‘சீனாவின் அத்துமீறல் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்த விவகாரத்தில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா போன்ற நட்பு நாடுக்கு ஆதவராக அமெரிக்க துணை நிற்கும்,’ என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் கடந்த மாதம் 23ம் தேதி நிறைவேறிய போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி அதில் சில திருத்தங்கள் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, செனட் சபையிலும் நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனுடன் சீனாவை கண்டிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருப்பதால், அது அமெரிக்காவில் சட்டமாகி இருக்கிறது. இதன் மூலம், இந்திய - அமெரிக்க உறவில் புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது.



Tags : Ladakh ,China ,US Congress , Violation of the Ladakh border is the resolution against China in the US Congress
× RELATED லடாக் எம்பிக்கு வாய்ப்பு மறுத்த பாஜ