×

போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மீதான 17பி குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து: ஊதிய கோரிக்கை நிறைவேற்ற சட்டப்போராட்டக்குழு கோரிக்கை

சென்னை:  ஊதிய உயர்வு கோரி ேபாராட்டத்தில் ஈடுபட்ட 118 டாக்டர்களுக்கு 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தற்போது இதை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக அரசு டாக்டர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை : தண்டனைகளை ரத்து செய்துள்ள அரசு, கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். எந்த காரணத்துக்காக 118 அரசு டாக்டர்களும், குடும்பத்தினரும் கடுமையாக தண்டிக்கப்பட்டார்களோ, அந்த கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். எனவே அரசாணை 354 ன் படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர் பணி இடங்களை உயர்த்த வேண்டும். மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்கள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ பட்டமேற்படிப்பு முடிக்கும் அரசு டாக்டர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.



Tags : Cancellation ,struggle ,doctors ,committee , Cancellation of the 17B indictment against the doctors involved in the struggle: the legal committee's demand to fulfill the wage demand
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...