கடந்த 4 மாதங்களில் மட்டும் மெட்ரோவில் 32 லட்சம் பேர் பயணம்: நிர்வாகம் தகவல்

சென்னை: 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 31.52 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. அதன்படி, 7.9.2020 முதல் 31.12.2020 வரை மொத்தம் 31,52,446 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதில், 7.9.2020 முதல் 30.9.2020 வரை 3,60,193 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். 1.10.2020 முதல் 31.10.2020 வரை மொத்தம் 7,03,223 பேரும், 1.11.2020 முதல் 30.11.2020 வரை 8,58,546 பேரும், 1.12.2020 முதல் 31.12.2020 வரை 12,30,484 பேரும், 21.12.2020 அன்று மட்டும் 47,214 பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட கியூ-ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி செப்டம்பர் 2020 முதல் டிசம்பர் 2020 வரை மொத்தம் 83,813 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 18,49,944 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2020 டிசம்பர் மாதத்தில் மட்டும் க்யூ-ஆர் குறியீடு முறையை பயன்படுத்தி 29,583 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், டிராவல் கார்டு முறையை பயன்படுத்தி 6,58,213 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>