×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மணப்பாட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

உடன்குடி: ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு மணப்பாடு கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஏழைகளின் கோவா என்றழைக்கப்படும் தென்தமிழகத்தின் சுற்றுலாத்தலம் மணப்பாடு. மணப்பாடு கடல் ஒருபுறம் ஆரவாரமாகவும், மறுபுறம் அமைதியாகவும் காட்சியளிப்பது சிறப்பாகும். மணப்பாடு கடற்கரையையொட்டி புனிதர் சேவியர் தங்கிய குகை, மணல் குன்றின் மீதுள்ள ஆலயம் என பல்வேறு சிறப்புகளை உள்ளிடக்கியது. மற்றொரு சூட்டிங் ஸ்பாட்டாகவும் திகழ்கிறது.

இதனால் எப்போதும் வெளியூர், வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள், கன்னியாகுமரி, திருச்செந்தூர் என ஆன்மீக சுற்றுலா செல்பவர்கள் வந்து செல்வர். நேற்று ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மணப்பாடு கடற்கரையில் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் குவிந்து கடலில் குளித்தும், கடற்கரையில் விளையாடியும் மகிழ்ந்தனர். ஆனால் திருச்செந்தூர் கடலில் புனித நீராடவும், கடற்கரை பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Tags : eve ,wedding , Tourists gather at the wedding on the eve of the English New Year
× RELATED வெளி நபர்கள் தங்க அனுமதி இல்லை...