மேலூர் அருகே கோயில் காளை இறப்பு

மேலூர்: மேலூர் அருகே கோயில் காளை இறந்தது. இதைத் தொடர்ந்து  காளைக்கு அஞ்சலி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டகுடியில் கற்குடைய அய்யனார் மற்றும் மந்தை கருப்பணசாமி கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை அப்பகுதி மக்களுக்கு செல்லமான காளையாக வலம் வந்தது. இக்காளைக்கு அம்பலம் என பெயரிட்டு அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இக்காளை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி உள்ளது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் நேற்று காளை இறந்தது. இதனால் கிராம மக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட காளையின் உடல் கொட்டகுடி கண்மாய் கரையில் அடக்கம் செய்யப்பட்டது. கிராமத்தில் அனைவரும் மாலை மரியாதை செலுத்தி காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

>