×

பாகிஸ்தானியர் கலை பும்ராவுக்கு கைகொடுக்கிறது: சோயிப் அக்தர் பேட்டி

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் அளித்துள்ள பேட்டி: பேட்டிங் நன்றாக ஆடினால், மிடில் ஆர்டர் சோபித்தால் இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. ரகானே மிகவும் அமைதியானவர். 10-15 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த ஒரு துணைக்கண்ட அணியும் ஆஸ்திரேலியாவில் அந்த அணியை போட்டு சாத்தும் என்று யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இப்போது இது நடக்கிறது. ரகானே மிகவும் கூலாக ஆனால் ஆக்ரோஷமாக கேப்டன்சி செய்கிறார். சமகால கிரிக்கெட்டில் பும்ரா புத்திசாலித்தனமான வேகப்பந்து வீச்சாளர். பேட்ஸ்மேன்களை காற்றில் ஏமாற்றும் கலையை கற்றுக்கொண்டார்.

இது பாகிஸ்தான் மாஜி வீரர்களின் வெற்றியின் ரகசியமாக இருந்தது. பும்ராவின் திறமை, செட் மற்றும் ஒரு பேட்ஸ்மேனை வெறும் “ஐந்து வினாடிகளில்” வெல்லும் திறனைக் கண்டு ஈர்க்கப்படுகிறார், அவர் இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளராக இருக்கலாம், அவர் பாதையில் எவ்வளவு புல் விடப்பட்டுள்ளது என்பதை விட காற்றின் வேகத்தையும் காற்றின் திசையையும் சரிபார்க்கிறார். இந்த விஷயம் பாகிஸ்தானியர்களின் கலையாக இருந்தது, காற்றோடு எப்படி விளையாட முடியும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அதன்படிதான் நான், வாசிம் அக்ரம், வாக்கர்யூனுஸ் செயல்பட்டோம்.

பந்து வீசும்போது 7 அடி ஓடி வந்து 5 விநாடிகளில் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் வகையில் பும்ரா பந்துவீசுகிறார். அவர் துல்லியமான வேகப்பந்து வீச்சாளர், அவருக்கு விக்கெட் எடுக்கும் கலை தெரியும், என தெரிவித்துள்ளார்.

Tags : Pakistani ,interview ,Bumrah ,Shoaib Akhtar , Pakistani art lends a hand to Bumrah: Shoaib Akhtar interview
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு