×

1981ம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்ட்டில் மைதானத்தில் இருந்து வாக்-அவுட் செய்தது ஏன்?.. கவாஸ்கர் விளக்கம்

மும்பை: 1981ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுனில் கவாஸ்கர் டெனிஸ் லில்லி பந்தில் எல்.பி.டபிள்யூ அவுட் என்று நடுவர் தீர்ப்பளித்தார், ஆனால் பந்து மட்டையில் பட்டுச் சென்றது என கவாஸ்கர் வாதம் செய்து மைதானத்திலேயே நின்றார், இதனையடுத்து டெனிஸ் லில்லி பெவிலியனை நோக்கி கைக்காட்டினார், பிற ஆஸ்திரேலிய வீரர்களும் போய்த்தொலை (கெட் லாஸ்ட்) என்று கவாஸ்கரைப் பார்த்துக் கூறினர். இதனால் தான் ஆத்திரம் தாங்காமல் வாக் அவுட் செய்ததாக சுனில் கவாஸ்கர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்தத் தொடரே ஆஸி. நடுவர் மோசடிகள் நிரம்பியதாக இருந்தது, அப்போது கவாஸ்கருக்கு எல்.பி. தீர்ப்பளித்த நடுவரின் பெயர் ரெக்ஸ் ஒயிட்ஹெட்.

இவருக்கும் அதுதான் 3வது டெஸ்ட், ஆர்வக்கோளாறில் மிகப்பெரிய கவாஸ்கர் விக்கெட்டை நடுவர் வீழ்த்தினார், கவாஸ்கர் அப்போது 70 ரன்கள் எடுத்து பிரமாதமாக ஆடி வந்தார். “எல்.பி. கொடுத்ததால் நான் ஏமாற்றமடைந்தேன் என்று ஆஸி. யும் நினைத்தது, மற்றவர்களும் நினைத்தனர், ஆனால் அதுவல்ல விஷயம். நான் சேத்தன் சவுகானைக் கடந்து செல்லும்போது ஆஸ்திரேலியர்கள் வார்த்தைகளை அள்ளித்தெளித்தார்கள், என்னை தொலைந்து போ என்றனர். அதனால்தான் சேத்தன் சவுகானையும் என்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தேன்.

பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டது, பார்வர்ட் ஷார்ட் லெக் பீல்டருக்கு இது நன்றாகத் தெரியும். ஆனால் டெனிஸ் லில்லி ஒப்புக் கொள்ளவில்லை என்று கவாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். அந்த டெஸ்ட் போட்டியில், வெற்றி பெற 143 ரன்கள் தேவை என்ற நிலையில் கபில்தேவ் வேகத்தில் பவுலிங்கில் ஆஸ்திரேலியா 83 ரன்களுக்குச் சுருண்டது. தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Melbourne Test , Why did he walk out of the field in the Melbourne Test in 1981? .. Gavaskar Description
× RELATED மெல்போர்ன் டெஸ்ட் தொடர்ந்து ஆஸி. முன்னிலை