×

ஜன. 15ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்..!

டெல்லி: அவசர கால பயன்பாட்டிற்காக கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. இதில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு என்ற கொரோனா தடுப்பூசியை மகாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் பரிசோதனை செய்து, உற்பத்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து ‘கோவேக்ஸின் என்ற பெயரில் கரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. ஆக்ஸ்போர்டு, பாரத் பயோ டெக் மற்றும் அமெரிக்காவின் பைசர் ஆகிய 3 நிறுவனங்கள், தங்களது கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க கோரிமத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகள் தாயாக உள்ளது எனவும் கூறினார். ஜனவரி 15-ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Jan ,Prakash Javadekar ,Govshield , Corona, Govshield, Vaccine, Minister Prakash Javdekar, Information
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களில் 12...