×

பிசிசிஐ தலைவரும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி..!

மேற்கு வங்கம்: இந்திய அணியின் பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கங்குலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலி (வயது 48). கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில்இன்று காலை உடற்பயிற்சியில் கங்குலி ஈடுபட்டு இருந்தபோது,திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் கங்குலியை பரிசோதனை செய்ததில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் ஆஞ்சிலோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட உள்ளதுஅதன்பின் வீடு திரும்புவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Saurav Ganguly ,BCCI ,Indian ,hospital ,Kolkata , BCCI, Former Indian Cricket, Saurav Ganguly, Hospital, Admission
× RELATED ஜெய்ஷா தலைமையிலான பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது!