பொன்னமராவதி அருகே இரட்டை கண்மாய் நிரம்பியது பொதுமக்கள் மலர்தூவி மகிழ்ச்சி

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே மைலாப்பூரில் உள்ள இரட்டை கண்மாய் நேற்று நிரம்பியது. பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.

கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூரில் உள்ள இரட்டை கண்மாய் நீர் நிரம்பி இருந்தது. நேற்று பொன்னமராவதி பகுதியில் கனமழை பெய்தது.

இதனையடுத்து புத்தாண்டு அன்று (நிரம்பி) கலிங்கி செல்ல தொடங்கியதால் மைலாப்பூர் கிராம மக்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் மடையின் அருகே நீரில் மலர் தூவி வருண பகவானை வணங்கினர். மேலும் அக்கிராம மக்கள் கூறுகையில், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் நீர் நிரம்பி கலிங்கி செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினர்.

Related Stories:

>