ஆங்கில புத்தாண்டையொட்டி கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு: பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி கோயில்கள் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் 2020ம் ஆண்டு முடிந்து 2021 ஆங்கிலப்புத்தாண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி,  பொதுமக்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதல் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், பாரிமுனை கந்தகோட்டம் முருகன் உட்பட பல்வேறு கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.வழக்கமாக  ெகாரோனா ஊரடங்கு காரணமாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் காலை 7 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் நேற்று காலை 5.30 மணிக்கும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டன.

இக்கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. அதிகாலையிலேயே பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். சமூக இடைவெளியை பக்தர்கள் பின்பற்றும் வகையில் வட்டம் வரையப்பட்டிருந்தது. அதில் பக்தர்கள் நின்றபடி வரிசையில் சென்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. கோயில்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், கொரோனா வழிகாட்டி நெறிமுறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் வரிசையில் நின்று தரிசிக்கும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. மேலும், பக்தர்களின் வசதிக்காக கோயில்களில் சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்பட்டன. மேலும், கோயில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே கோயிலுக்குளு் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, பெரிய கோயில்களில் நுழைவாயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

முக கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டன. சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோன்று ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சென்னையில், சாந்தோம் தேவாலயம்,  பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம்,  மயிலாப்பூர் லஸ் பிரகாச மாதா தேவாலயம், அடையாறில் உள்ள இயேசு அன்பர் கிறிஸ்தவ தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், அண்ணாசாலை மேம்பாலத்தில் உள் கதீட்ரல் தேவாலயம், எழும்பூரில் செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை தேவாலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு 11.30 மணி முதல் அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதேபோல், திருத்தணி முருகன் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Related Stories:

>