நியூசி. - பாக் 2வது டெஸ்ட் வேகம் வேக்னருக்கு பதிலாக மாட் ஹென்றி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து-பாகிஸ்தான் இடையே நாளை தொடங்க உள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து வேகம் நீல் வேக்னர் காயம் காரணமாக விலகியதால், மாட் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். மவுண்ட் மவுங்கானுயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் நியூசி 101ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. மொத்தம் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசி அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வேக்னர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.  அவருக்கு கால் விரல்களில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ‘வேக்னருக்கு சுமார் 6வார காலம் ஓய்வு தேவை’ என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் வேக்னருக்கு பதிலாக மாட் ஹென்றி(29) அணியில் சேர்்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில்  பாக் -நியூசி ஏ அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியில்  ஹென்றி 6 விக்கெட்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நியூசி பயிற்சியாளர் கிரே ஸ்டெட், ‘பயிற்சி போட்டியில் சாதித்துள்ள ஹென்றி இப்போது நல்ல ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் வரவு அணிக்கு மேலும் வலு  சேர்க்கும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

More