டெல்ரே பீச் ஓபன்; விலகினார் ஆன்டி மர்ரே

இடுப்பில் அறுவை சிகிச்சை, கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு நிறைய போட்டிகளில்  இங்கிலாந்து வீரர் ஆன்டி மர்ரே பங்கேற்கவில்லை. இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடாவில்  ஜன.7ம் தேதி டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது.  இந்தப் போட்டியில் பங்கேற்க ஆன்டி மர்ரேவுக்கு சிறப்பு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவரும் பங்கேற்க ஒப்புக் கொண்டார். அதே நேரத்தில் கொரோனா பரவல் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் அதிகரித்து வருகிறது. எனவே விமான போக்குவரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  அதனால் டெல்ரே ஓபனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மர்ரே, ‘பிப்ரவரில் தொடங்க உள்ள ஆஸ்திரேலியா ஓபனுக்கு முன்னதாக ஏற்படும் அபாயங்களை குறைக்க விரும்புகிறேன். அதனால் எனது அணியினருடன் கலந்து ஆலோசித்து இந்த விலகல் முடிவை எடுத்தேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: