×

மீண்டும் சர்வதேச போட்டி; ராணி ராம்பால் உற்சாகம்

கொரோனா  பீதி காரணமாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி கடந்த 10 மாதங்களுக்கு மேலாக எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்நிலையில் ஜன.17 முதல் ஜன.31ம் தேதி வரை அர்ஜென்டீனாவுக்கு எதிராக 8 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா விளையாட உள்ளது.இது குறித்து அணியின் கேப்டன் ராணி ராம்பால், ‘ 2020ம் ஆண்டு எங்களுக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது. ஆனாலும் தேசிய பயிற்சி முகாமில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தோம். நம்பிக்கையுடன் காத்திருந்தோம். இந்நிலையில் அர்ஜென்டீனாவுக்கு எதிரான தொடர் மூலம் நாங்கள் மீண்டும் சர்வதேச போட்டிளுக்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. அது  நம்பிக்கையை அதிகரிக்கும். கூடவே இந்த ஆண்டு நடைபெற உள்ள டோக்கியா ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக உதவும்.  பதக்கத்திற்கு குறைவான எதையும் நாங்கள் இலக்காக வைக்கவில்லை. டோக்கியாவில் வரலாற்றை உருவாக்கி, நாட்டை பெருமைப்படுத்த விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார்.

Tags : Rampal , Again, international competition, Rani Rampal
× RELATED ரூ.60 கோடி லஞ்சம் : ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு