கோஹ்லி, ஹர்திக் புத்தாண்டு விருந்து

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் விராத் கோஹ்லி, ஹர்திக் பாண்டியா  இருவரும்   குடும்பத்துடன் விருந்தில் பங்கேற்றனர். அதனை இருவரும் நேற்று சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர். கொரோனா கால விமர்சனம் வந்து விடக் கூடாது என்பதால், படத்துடன் எச்சரிக்கை கருத்துகளையும்  குறிப்பிட்டுள்ளனர். கோஹ்லி ‘சோதனையில் எதிர்மறை (நெகட்டிவ்) உறுதியான நண்பர்கள் நேர்மறையாக (பாசிட்டிவ்)  நேரத்தை செலவிடுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஹர்திக், ‘முறையாக சோதிக்கப்பட்ட நண்பர்கள் புத்தாண்டை கொண்டு வரும் சந்திப்பு ’ என்று எழுதியுள்ளார்.

Related Stories:

>