×

ஐரோப்பிய யூனியனில் இருந்து 31 நள்ளிரவு 11 மணியுடன் வெளியேறியது இங்கிலாந்து

லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவுடன் இங்கிலாந்து முழுமையாக வெளியேறியது. அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிணைந்து செயல்படுவதற்காக ஐரோப்பிய யூனியன் தொடங்கப்பட்டது. 27 நாடுகளை உறுப்பினராக கொண்ட இந்த அமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற விரும்பியது. இதற்காக, இருதரப்புக்கும் இடையே பிரெக்சிட் ஒப்பந்தம் உருவானது. பல்வேறு முட்டுக்கட்டைகளுக்குப் பிறகு, 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு லண்டன் நேரப்படி 11 மணியுடன் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேறியது. இதன் மூலம், உலகின் அனைத்து நாடுகளுடனும் இங்கிலாந்து இனிமேல் தனது விருப்பப்படி வர்த்தகம், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களை செய்து கொள்ளவும், இருதரப்பு உறவுகளையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

இது பற்றி இந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘‘இங்கிலாந்துக்கு இது அற்புதமான நேரம். நாம் உயர்வதற்கான சுதந்திரம் இப்போது நம் கைகளில் உள்ளது,’’ என்றார். எனினும், வேலை, வர்த்தகம் தொடர்பான விவகாரங்களில் ஐரோப்பிய யூனியனுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இருதரப்புக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள், விளைவுகள் வருமாறு:
* இங்கிலாந்து - ஐரோப்பிய யூனியன் இடையே 8,940 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் இருதரப்புக்கும் இடையே மேற்கொள்ளப்படும்.
* இருதரப்பிலும் வரிகள் கிடையாது.
* எனினும், எல்லைகளைத் தாண்டி செல்வதற்கான அரசு நடைமுறைகள், வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களில் மாற்றம் ஏற்படும்.

Tags : UK ,European Union , In the European Union, 31 midnight, 11 a.m., UK
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது