30 ஆண்டு நடைமுறை அணு உலைகள் பட்டியல் இந்தியா-பாக். பரிமாற்றம்

புதுடெல்லி: அணு மின் நிலையங்களை தாக்குவதில்லை என இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கையெழுத்தாகி, 1991ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமலுக்கு வந்தது. அதிலிருந்து தொடர்ந்து 30 ஆண்டுகளாக இந்த பட்டியல் ஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி பரிமாறிக் கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இதற்கான நிகழ்ச்சி இஸ்லாமாபாத், டெல்லியில் உள்ள தூதரகங்களில் நேற்று முன்தினம் நடந்ததாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் சமயத்திலும் இந்த பட்டியல் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.

* கடந்த 2008, மே 21ம் தேதி இந்தியாவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனது நாட்டு சிறையில் இருக்கும் இந்திய கைதிகளின் பட்டியலை பாகிஸ்தான் ஆண்டுதோறும் அளித்து வருகிறது. அதன்படி, இந்தியாவிடம் நேற்று அது அளித்த பட்டியலில், தனது நாட்டு சிறையில் 270 இந்திய மீனவர்கள் உட்பட மொத்தம் 319 இந்தியர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Related Stories:

>