×

சரக்கு கப்பல் ஊழியர்களை விடுவிக்க வேண்டும்: சீனாவுக்கு கோரிக்கை

புதுடெல்லி: சீனாவுக்கு சரக்கு ஏற்றிச் சென்ற 2 இந்திய கப்பல்கள், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அங்குள்ள துறைமுகங்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 39 இந்திய ஊழியர்கள் உ்ள்ளனர். இந்த கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்க அனுமதி தராமலும், ஊழியர்களை வெளியே செல்ல விடாமலும் சீன அரசு கெடுபிடி செய்து வருகிறது. பல மாதங்களாக கப்பலில் தவித்து வரும் இந்திய ஊழியர்கள், தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கதறி அழுது வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் அனுராக் வத்சவா நேற்று அளித்த பேட்டியில், ‘‘கப்பல்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், மனிதநேய அடிப்படையிலும் ஊழியர்களை சீன அரசு விடுவிக்க உதவ வேண்டும்,’’ என்றார்.



Tags : China , Freight, crew, to China, on demand
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்