சென்னையில் வருகிற 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசியல் மாநாடு: ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி அழைப்பு

சென்னை: சென்னையில் வருகிற 6ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசியல் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் ஓவைசி உள்பட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  திமுக சிறுபான்மை அணி சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வருகிற 6ம் தேதி மாலை 4 மணியளவில் நல்லாட்சி மலர இதயங்களை இணைப்போம் என்ற பெயரில் அரசியல் மாநாடு நடக்கிறது. மாநாட்டிற்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து சிறப்புரையாற்றுகிறார்.இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். இதேபோல் ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>