ஓபிஎஸ்சுடன் ஜி.ராமகிருஷ்ணன் திடீர் சந்திப்பு

சென்னை: சத்தியவாணி முத்து நகர் மக்களை புதிய குடியிருப்புகளில் குடியமர்த்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். மனுவில், ‘வலுக்கட்டாயமாக மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்தி அவர்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காமல், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள 1056 குடியிருப்புகளில் குடியமர்த்த வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இதைபரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக  ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.

முதல்வருக்கு ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து: முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதேபோன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது சென்னை முகாம் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் எம்.எஸ்.ஜாபர் சேட் பணி ஓய்வு பெறுவதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.லலிதாவும் முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

Related Stories:

>