சூரியன் உதித்து விட்டது : பிரதமர் மோடி புத்தாண்டு கவிதை

புதுடெல்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களைப்போற்றும் விதமாக, ‘சூரியன் உதித்து விட்டது’ என்ற புத்தாண்டு கவிதையை எழுதியுள்ளார் பிரதமர் மோடி. மத்திய அரசின் டிவிட்டர் பக்கம் வீடியோ செய்தியாக இக்கவிதையை வெளியிட்டுள்ளது. அதில், ‘புதிய ஆண்டின் முதல் நாளை நம் அன்புக்குரிய பிரதமரின் உற்சாகமூட்டும் கவிதையுடன் தொடங்குவோம்’ என்ற குறிப்புடன் வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில் ராணுவத்தினர், சுகாதாரத் துறையினர், விவசாயிகள், பெண்கள், பறக்கும் தேசியக் கொடி, பிரதமர் மோடி போன்ற காட்சிகள் ஒளிர்கின்றன.

இத்துடன் பிரதமர் தனது பிரத்யேக டிவிட்டரிலும் புத்தாண்டு வாழ்த்து வெளியிட்டிருக்கிறார். ‘அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த புதிய ஆண்டு எல்லோருக்கும் நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சி மற்றும் செல்வத்தையும் அளிக்கட்டும். நம்பிக்கையும், ஆரோக்கியமும் மேம்படட்டும்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>