×

கடல் சீற்றத்தால் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல் தமிழறிஞர்கள் ஏமாற்றம்: 5 அடி உயர மாதிரி சிலைக்கு மரியாதை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி  கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000ம் ஆண்டு  நிறுவப்பட்டது. சிலையை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.  ஆண்டுதோறும் சிலை நிறுவன நாளில் தமிழறிஞர்கள் தனிப்படகில் சென்று  திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவது வழக்கம்.  நேற்று 21-வது நிறுவன தினத்தையொட்டி தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  கன்னியாகுமரியில் திரண்டனர். ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதன்காரணமாக  திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு  இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடலில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு  மரியாதை செலுத்த முடியவில்லை.

இதையடுத்து தமிழறிஞர்கள் கொண்டு வந்த  5 அடி உயர மரத்திலான மாதிரி திருவள்ளுவர் சிலையை  பூம்புகார் துறைமுக வளாகத்தில்  வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில்  கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய செயலாளர் துரை நீலகண்டன்,  ஒருங்கிணைப்பாளர் பகவதி பெருமாள், முன்னாள் மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன் மற்றும் தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags : scholars ,Tamil ,Thiruvalluvar , Tamil scholars disappointed with Thiruvalluvar statue due to sea rage
× RELATED தவறான சிகிச்சையால் வாலிபர்...