×

அனைத்து வேலைகள், படிப்புகளுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை,: அனைத்து வேலைகள், படிப்புகளுக்கும் இடஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, புனே தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், டெல்லியில் உள்ள தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் காலியாக உள்ள சி மற்றும் டி நிலையிலான அறிவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களை நிரப்புவதில் எந்த பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவோ, அதன் நிறுவனங்களோ இடம் பெறவில்லை.

இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதியும், திறமையும் பின்னுக்கு தள்ளப்படுவதாக கூறப்படுவதே சமூகநீதிக்கு எதிரான சதியாகும். இடஒதுக்கீடு எந்த வகையிலும் தகுதியை பாதிப்பதில்லை என்பது பல்வேறு தருணங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சில நிறுவனங்களை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பது என்ற கொள்கை திருத்தப்பட வேண்டும். மத்திய அரசின் அனைத்து நிறுவன வேலைவாய்ப்புகளிலும், மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவங்களிலும் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு முழுமையான இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்; அதன் மூலம் சமூகநீதியை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : Ramadas , All jobs, courses, reservations, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...