×

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு 5ம் கட்ட சுற்றுப்பயணம்

சென்னை: திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு: 2021ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் 5ம் கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். வருகிற 18 காலை 9 மணி-சென்னை வடக்கு, மாலை 4 மணி-சென்னை வடகிழக்கு, 19ம் தேதி காலை 9 மணி-சென்னை கிழக்கு, 19ம் தேதி 4 மணி-சென்னை தெற்கு. 20ம் தேதி காலை 9 மணி-சென்னை தென்மேற்கு. 20ம் தேதி மாலை 4 மணி-சென்னை மேற்கில் நடைபெறும். காலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 9 மணிக்கும்; மாலை நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக 4 மணிக்கும் துவங்கப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK Election Report Preparation Team 5th Phase Tour , DMK Election, Report, Group 5th Phase, Tour
× RELATED சொல்லிட்டாங்க…