×

மலைக்கிராம மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்டது மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, மகராஜன் மெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட ஏழுமலை கிராமங்கள் உள்ளன. இங்கு 8,500க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தேயிலை, ஏலம், மிளகு மற்றும் காப்பி எஸ்டேட்களில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த மலைக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலை தோட்ட பகுதிகளிலும் யானை, காட்டு மாடுகள், சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி நுழைந்து அச்சுறுத்தி வருகின்றன.

குறிப்பாக ஒற்றை யானை ஒன்று கடந்த சில மாதங்களாக மலைக்கிராம பகுதிகளில் உலா வருகிறது. இந்த யானை தாக்கியதில் மணலாரை சேர்ந்த அமாவாசை, முத்தையா ஆகியோர் பலியாகினர். ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மலைக்கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : The lone elephant threatening the hill people
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...