×

பல நாடுகளில் பீதியானது போல் அகமதாபாத் பூங்காவில் மர்ம தூண்?

அகமதாபாத்: பல நாடுகளில் திடீரென தோன்றிய மர்ம உலோக தூண் போன்று, அகமதாபாத் பூங்காவிலும் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அகமதாபாத்தின் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில்  திடீரென உலோகத்தால் ஆன  6 அடி உயர ஒற்றைத் தூண் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. பூங்காவில் பணிபுரியும் உள்ளூர் தோட்டக்காரரான ஆசாராம் கூறுகையில், ‘நான் மாலையில் வீட்டிற்குச் சென்றபோது, அது இல்லை. ஆனால் மறுநாள் காலையில் நான் வேலைக்குத் திரும்பியபோது, இந்த திடீர் உலோக தூண் அமைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்’ என்றார்.

அகமதாபாத்தின் மர்ம உலோகத் தூண் அமைப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதனால், பூங்காவுக்கு படையெடுத்த மக்கள் உலோக தூண் அருகே நின்று செல்பிக்களையும் ஆர்வத்துடன் எடுத்துச்சென்றனர். எனினும், இந்த உலோகத்தூண் தனியார் நிறுவனம் ஒன்றால் நிறுவப்பட்டது என்பது தெரியவந்ததால் அதன் மர்மம் நீடிக்கவில்லை. முன்னதாக உலகெங்கிலும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் திடீரெனத் தோன்றி பரபரப்பை ஏற்படுத்திய மோனோலித் எனப்படும்  மர்ம உலோகத் தூண், இப்போது இந்தியாவிலும் தோன்றியதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Tags : park ,Ahmedabad ,countries , Mystery pillar in Ahmedabad park as panicked in many countries?
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்