×

ஆஸ்திரேலியாவில் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராட வேண்டியது கட்டாயம்: ரகானேவுக்கு மாஜி கேப்டன் பிஷன்பேடி அட்வைஸ்!

இந்திய அணி எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் கடினமாக உழைக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் பேடி கூறியுள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் படுமோசமாகச் சொதப்பி 36 ரன்களுக்கு சுருண்ட நிலையில், அடுத்த போட்டியில் ரகானே தலைமையில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தொடர்ந்து மற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டால், ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் பேடி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பேடி, கேப்டன் ரகானே நெருக்கடியான நேரங்களில் பொறுமையுடன் சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார் எனத் தெரிவித்துள்ளார். “ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 4-0 என ஒயிட் வாஷ் செய்வதை இந்திய அணி தடுத்துள்ளது. ரகானே பொறுமையை கடைப்பிடித்தது பார்ப்பதற்கு அழகாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் சுமாராக உள்ளது. இந்திய அணியால் தொடரைக் கைப்பற்ற முடியும்” என பதிவிட்டுள்ளார். மேலும் பத்திரிகை ஒன்றுக்குப் அளித்த பேட்டியில், “36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மிகவும் மோசமானது. அடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது அசத்தலான வெற்றி கிடையாது.

இரண்டு போட்டிகளையும் இந்திய அணி மறந்துவிட வேண்டும். ஒன்றைக் கனவாகக் கருத வேண்டும், மற்றொன்று மகிழ்ச்சி கொள்ளும் அளவுக்கு பெரியது கிடையாது என நினைத்துக்கொள்ள வேண்டும். இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. அதில் கடுமையாகப் போராட வேண்டியது கட்டாயம். கோப்பையை வெல்வது எப்படி என்பதை கேப்டன் ரகானே சிந்திக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags : Australia ,FishenPady ,Raghane , Australia must fight hard to win the trophy: Former captain FishenPady's advice to Raghane!
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...