ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி மலர்க்கொத்துடன் புத்தாண்டு வாழ்த்து கடிதம்.!!!

சென்னை: குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு நேற்றுடன் முடிவடைந்து இன்று 2021-ம் ஆண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள்  கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பொதுமக்கள் சென்று இறைவனை வழிப்பட்டு 2021-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே, 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் மோடிக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதத்தை முதல்வர் பழனிசாமி அனுப்பி வைத்துள்ளார்.

Related Stories:

>