2021-ம் ஆண்டு ஆரோக்கியம், மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் புத்தாண்டு வாழ்த்து.!!!

டெல்லி: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு நேற்றுடன் முடிவடைந்து இன்று 2021-ம் ஆண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள்  கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் பொதுமக்கள் சென்று இறைவனை வழிப்பட்டு 2021-ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே, 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உங்களுக்கு 2021 இனிய வாழ்த்துக்கள். 2021-ம்  ஆண்டு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி, செழிப்பை கொண்டு வரட்டும். ஆங்கிலப் புத்தாண்டில் ஆரோக்கியம், நம்பிக்கை மேலோங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>