வீட்டின் முன்பு கூட்டமாக நிற்பதை கேட்டதால் அதிமுக பிரமுகர் தாக்கியதாக பாஜ நிர்வாகி போலீசில் புகார்

சென்னை: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த ஜெகதீசன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான், சேப்பாக்கம் பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவராக உள்ளேன். எனக்கு சொந்தமான வீட்டில் சேப்பாக்கம் பகுதி அதிமுக நிர்வாகி சிவா வாடகைக்கு உள்ளார். இவர், தனது கட்சிக்காரர்களுடன் எனது வீட்டின் முன்பு கூட்டமாக  அடிக்கடி நிற்பது வழக்கம். இதனால், எங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து நான் பலமுறை கூறியும் சிவா கேட்கவில்லை. எங்கள் வாகனத்தை வீட்டிற்குள் எடுத்து செல்லும்போது, நாங்கள் இருக்கும் வரை நீங்கள் இங்கு வரகூடாது என்று மிரட்டினார்.  இதனால் ஏற்பட்ட தகராறில் சிவா தனது ஆட்களை வைத்து என்னையும், எனது மகளையும் இரும்பு கம்பி மற்றும் ஹெல்மெட்டால் தாக்கினார். இதில் எனது மகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு உள் காயங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களை தாக்கிய அதிமுக நிர்வாகி சிவா மற்றும் அவரது ஆட்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>