நர்சிங் கல்லூரி விடுதியில் தாளாளர் பாலியல் தொல்லை: குமரி கலெக்டர் ஆபீசில் மாணவிகள் தர்ணா

நாகர்கோவில்: கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 13 பேர் நேற்று  நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் பெற்றோருடன் வந்து திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.   பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனு: தக்கலை அருகே உள்ள ஒரு பாராமெடிக்கல் கல்லூரி 20 வருடமாக மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரத்துடன் செயல்படுவதாக கூறி எங்களை சேர்த்தனர். விடுதி என்று கூறி சிறிய அறையில் 100க்கும் மேற்பட்டவர்களை வைத்து சரியாக  உணவு கொடுக்காமல், தகுதியான ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தாமலும் கொடுமைப்படுத்தி வந்தனர். கல்லூரி தாளாளர் எங்கள் விடுதிக்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை வெளியில் சொன்னால் அசல் சான்றிதழ் தர மாட்டோம் என்று மிரட்டுகிறார். எனவே மாவட்ட நிர்வாகம், தாளாளர், அவரது மனைவி மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>