×

காஷ்மீரில் கோயில் மீது குண்டு வீசி தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கத்துவாவில் உள்ள இந்து கோயில் மீது கையெறி குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை. பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள தெரி  கிராமத்தில் உள்ள  இந்து கோயில் மீது இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கில் திரண்டு தாக்குதல் நடத்தினர். கடப்பாரை, சம்மட்டி மூலம் அதை இடித்து தள்ளினர். இதற்கு மத்திய அரசும் ,பாஜ உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பாகிஸ்தான் அரசும் இச்செயலை கடுமையாக கண்டித்தது. இந்நிலையில், கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக  நேற்று 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஹிரன்நகர் பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் மீது நேற்று தீவிரவாதிகள்  கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அந்த குண்டுகள் வேறு இடத்தில் விழுந்ததால் கோயிலுக்கு பாதிப்பு ஏற்டவில்லை. உடனே, பாதுகாப்பு படைகள் அப்பகுதியை சுற்றி வளைத்து, குண்டு வீசிய தீவிரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தினர். மத கலவரத்தை தூண்டுவதற்காக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


Tags : Bomb attack ,Kashmir , Kashmir, temple, bombing, attack
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...