×

சியாச்சினை பாதுகாத்த கர்னல் குமார் மறைவு

புதுடெல்லி: சியாச்சின் பனிச் சிகரத்தை பாதுகாத்த கர்னல் நரேந்திர புல்குமார் டெல்லியில் நேற்று உயிரிழந்தார். இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர் நரேந்திர புல் குமார். கடந்த 1965 மலையேற்றத்தின் மூலமாக முதன் முதலில் சியாச்சின் பனிச் சிகரத்துக்கு சென்றவர். அங்கு, இந்திய தேசியக்கொடியை முதலில் நாட்டியவர். அதன் பிறகும் பலமுறை இந்த பனிச் சிகரத்துக்கு பலமுறை சென்ற அவர், அதன் ராணுவ முக்கியத்துவத்தை அறிந்தார்.

இது பற்றி இந்திய ராணுவத்துக்கும், மத்திய அரசுக்கும் ஆதாரப்பூர்வ குறிப்புகள் அனுப்பி, அதன் முக்கியத்துவத்தை புரிய வைத்தார். அவருடைய வரைபடங்கள், வீடியோக்களின் அடிப்படையில்தான் கடந்த 1984ம் ஆண்டு இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் மேக்தூத்’ மூலம், சியாச்சின் பனிச் சிகரத்தை ஆக்கிரமிக்கும் பாகிஸ்தானின் முயற்சியை முறியடித்தது. இதில், புல் குமார் முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில், வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த குமார் (87), சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், ராணுவ தளபதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Tags : Colonel Kumar ,Siachen , Colonel Kumar, deceased
× RELATED சியாச்சின் பனிமலையில் பலியான ராணுவ வீரர் உடல்; 38 ஆண்டுகளுக்கு பின் மீட்பு