×

அமைச்சர்கள் வந்த விமானத்தை தகர்க்க முயற்சி: ஏமன் விமான நிலைய தாக்குதலில் 26 பேர் பலி: ஹவுதி தீவிரவாதிகள் கைவரிசை

சனா: ஏமன் நாட்டில் அமைச்சர்கள் வந்த விமானத்தை குறி வைத்து, ஏடன் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏமன் நாட்டில் ஹவுதி தீவிரவாதிகளுக்கும், அரசு படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளிக்கிறது. அதே போல், ஹவுதி தீவிரவாதிகளுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இந்நிலையில், சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள ஏமன் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள், நேற்று முன்தினம் மாலை விமானம் மூலம் ஏடன் விமான நிலையம் வந்தனர். அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கியபோது, அருகில்  சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. ஏவுகணைகளும் சீறிப் பாய்ந்து வந்து தாக்கின. இதனால், அமைச்சர்களில் ஒரு பகுதியினர் மீண்டும் விமானத்துக்குள் சென்று பதுங்கினர். மற்றவர்கள் படிகளில் இறங்கி பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். இந்த தாக்குதலில் அமைச்சர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 26 பேர் இறந்துள்ளனர். 110 காயமடைந்துள்ளனர். புதிதாக அமைந்துள்ள அரசை சீர்குலைக்கவே, ஈரான் ஆதரவுடைய ஹவுதி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. தாக்குதல் குறித்து பிரதமர் சயீத் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தால் பேரழிவு ஏற்பட்டிக்கும். இது, தீவிரவாதிகளின் கோழைத்தனமான செயல்,’ என்று கூறியுள்ளார்.

Tags : ministers ,militants ,Yemen ,Houthi ,airport attack , Ministers, Houthi extremists, handcuffs
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...