கதவு மட்டுமே திறந்ததால் விபரீதம்: இஸ்ரோ மூத்த பெண் அதிகாரி லிப்ட்டில் விழுந்து பரிதாப பலி

திருமலை: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்றிய மூத்த அதிகாரி வசந்தி (54). 10 நாட்களுக்கு முன்பு தனது மகளின் கல்லூரி நுழைவுத் தேர்வுக்காக திருப்பதிக்கு வந்தார். நேற்று மதியம் அவர் தங்கியிந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து கீழே இறங்குவதற்காக லிப்ட் அருகே காத்திருந்தார்.

அப்போது, லிப்ட் மேலே வருவதற்குள் தானாக கதவு மட்டும் திறந்து கொண்டது. இதனால், லிப்ட் வந்து விட்டதாக நினைத்து வசந்தி உள்ளே கால் எடுத்து வைத்தார். அப்போது கீழே இருந்த லிப்டின் மீது விழுந்து தலையில் படுகாயம் அடைந்து, அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து போலீசார் விசாரித்து வருகினறனர்.

Related Stories:

>