×

30 ஆண்டுகால போராட்டத்துக்கு முடிவு: கருக்கலைப்பு செய்வதற்கு அர்ஜென்டினா அனுமதி

பியூனஸ் ஏர்ஸ்: லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில், கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க கோரி பெண்கள் அமைப்பினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தனர். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என பெரும்பான்மையான கத்தோலிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நாட்டில், கடந்த 1983 முதல் 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் ரகசிய கருக்கலைப்பின் போது இறந்தள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் அமைப்பினர்களின் தொடர் போராட்டம், கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும்  சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, 14 வாரம் வரையிலான கருக்கலைப்பு, பாலியல் பலாத்காரம், பெண்ணின் உடல்நிலைக்கு ஆபத்து உள்ளிட்ட சூழல்களில் கருக்கலைப்பு செய்யலாம்.

Tags : Argentina , Abortion, Argentina, allowed
× RELATED அர்ஜெண்டினாவில்...